Bengaluru-வில் Google-ன் புதிய அலுவலகம்., மாத வாடகை இவ்வளவா?
பெங்களூருவின் Whitefield-ல் உள்ள Alembic City-யில் 649,000 சதுர அடி அலுவலக இடத்தை Google நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது.
ஒரு சதுர அடிக்கு ரூ.62 என அலுவலகம் மாத வாடகை விகிதத்தில் மூன்று வருட பூட்டு காலத்துடன் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது..
அதாவது மாத வாடகை மட்டும் இந்திய பணமதிப்பில் ரூ. 4,02,38,000 செலுத்த வேண்டியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் தனது அமெரிக்க அலுவலகங்களில் இருந்து சில முக்கிய ஊழியர்களை வெளியேற்றிய பிறகு கூகுள் புதிய அலுவலக இடத்தை வாங்கியது. மேலும், சில பதவிகளை இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அறிக்கையின்படி, 2022-இல், Google Connect Services India Pvt. லிமிடெட் ஹைதராபாத்தில் 600,000 சதுர அடி அலுவலக இடத்திற்கான குத்தகையை புதுப்பித்துள்ளது.
மேலும், பெங்களூருவில் உள்ள Bagmane Developers-இடமிருந்து 1.3 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுக்க கூகுள் ஒப்புக் கொண்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் கூகுளின் office space portfolio 3.5 மில்லியன் சதுர அடியாக விரிவடைந்துள்ளது. நிறுவனம் இப்போது இந்தியா முழுவதும் ஐந்து நகரங்களில் இயங்குகிறது, மொத்த இடம் 9.3 மில்லியன் சதுர அடி என, கூகுள் இந்தியாவில் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்துகிறது.
சமீபத்தில் Google நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள Foxconn நிறுவனத்தில் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து மாநிலத்தில் ட்ரோன் தயாரிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் Pixel ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி Pixel 8 மாடலுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Google, Google Bengaluru Office, Google office space at Alembic City Whitefield, Google office rent