இலக்கணப் பிழைகளுக்கு இனி பயப்பட வேண்டாம், புதிய அம்சத்துடன் Google உதவும்
இலக்கண தவறுகளை சரி செய்ய கூகுள் நிறுவனம் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Google Search-ல் இலக்கணப் பிழைகளை சரிபார்க்க உதவும் புதிய அம்சம்
வாக்கியங்களின் கட்டமைப்பைச் சரிபார்க்கவும், இலக்கணப் பிழைகளைக் கண்டறிந்து புகாரளிக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும். இதற்காக சிறப்பு கருவிகள் அல்லது வேறு எந்த இணையதளங்களையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
Google ஏற்கெனெவே Docs மற்றும் Gmail-ல் இந்த வசதியை கொண்டுள்ளது. பயனர் ஒரு வாக்கியத்தை தட்டச்சு செய்யத் தொடங்கியவுடன், அதில் பிழைகள் இருந்தால், அவற்றைத் திருத்துவதற்கான ஆலோசனைகள் காட்டப்படும்.
இப்போது Google Search-லேயே இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளும்படி (GOOGLE SEARCH GRAMMAR CHECK FEATURE) வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
இலக்கணப் பிழைகளைத் திருத்த உதவும் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த,
- டெஸ்க்டாப் அல்லது மொபைலில் Google தேடல் URL ஐப் பயன்படுத்தி தேடலுக்குச் செல்லவும்
- நீங்கள் இலக்கணத்தை சரிபார்க்கவேண்டிய வாக்கியத்தை அதில் டைப் செய்து, அதனுடன் Grammer Check என டைப் செய்யவேண்டும்.
- முடிவைப் பெற என்டர் பொத்தானை தட்டவும்.
- வாக்கியத்தில் இலக்கணம் சரியாக இருந்தால், அதற்கு அடுத்ததாக ஒரு பச்சை நிற டிக் குறி (Green Tik Mark) தோன்றும்.
- பிழை இருந்தால் சரி செய்யப்படும். எங்கே திருத்தம் செய்யப்பட்டது என்பதையும் காட்டும். அதேபோல் எழுத்துப் பிழைகள் இருந்தாலும் சுட்டிக்காட்டப்படும்.
மேலும் மேம்படுத்தப்படும்
அதே நேரத்தில், இலக்கணப் பிழைகளை முழுமையாகச் சரி செய்யவோ அல்லது இந்தப் பரிந்துரைகள் 100% துல்லியமாக இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்கவோ முடியாது என்று Google தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இவை பயனர்களின் கருத்துக்களை சரிபார்த்து மேலும் மேம்படுத்தப்படும் என டெஹ்ரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆங்கில மொழியில் மட்டுமே இலக்கண சரிபார்ப்பு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Google Check Grammar On Search, Grammer Check on Google Search, Google grammar check feature, GOOGLE SEARCH GRAMMAR CHECK FEATURE