15 நிமிடங்களில் 100 பில்லியன் இழப்பை சந்தித்த Google - பின்னணியில் சாம் அல்ட்மனின் ஒற்றை பதிவு
Open Ai வெளியிட்ட Atlas இணைய உலாவியால், கூகிள் நிறுவனம் 100 பில்லியன் சந்தை மதிப்பை இழந்தது.
ChatGPT Atlas
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் ஆகிய டிஜிட்டல் சாதனங்களில் பெரும்பாலானோர் கூகுள்நிறுவனத்தின் கூகுள் குரோம்(Google Chrome) இன்டர்நெட் பிரவுசரை பயன்படுத்தி வருகின்றனர்.
உலகளவில் 71% பேர் தங்களது இணைய தேடலுக்கு கூகுள் குரோம் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் குரோம் இணைய உலாவி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தற்போது குரோமுக்கு போட்டியாக Open AI நிறுவனம் ChatGPT Atlas என்னும் புதிய இணைய உலாவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில், பயனர்களின் பழைய தேடல்களை நினைவில் வைத்து, அதனடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளை வழங்குகிறது.
மேலும், இந்த atlas மூலம் தேடும் போது, அதன் Agent அம்சம், விமான டிக்கெட் முன்பதிவு செய்வது, ஷாப்பிங் செய்வது போன்ற பணிகளை AI மேற்கொள்கிறது. இந்த வசதியை தற்போது கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்கள் மட்டுமே அணுக முடியும்.
100 பில்லியன் இழப்பு
இது தொடர்பான அறிவிப்பை Open AI CEO சாம் அல்ட்மன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
Our new AI-first web browser, ChatGPT Atlas, is here for macOS.
— Sam Altman (@sama) October 21, 2025
Please send feedback! Availability on other platforms to follow.
இதன் காரணமாக கூகிள் நிறுவனத்தின் பங்குகளின் விலை திடீரென குறைந்ததாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு, 252.68 டொலர் ஆக இருந்த கூகிள் பங்கு, 15 நிமிடங்களுக்குள் 246.15 டொலராக குறைந்தது.
இதன் காரணமாக, கூகுள் அதன் சந்தை மதிப்பில் 100 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் 8.77 லட்சம் கோடி) இழப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு, சில மணி நேரங்களில் கூகிள் மீண்டும் தனது சந்தை மதிப்பை எட்டியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |