Google Maps-இல் புதிய அப்டேட்., AI அடிப்படையிலான வழிகாட்டி Navigation, Speedometer
Google Maps தனது புதிய AI அடிப்படையிலான வழிகாட்டி (Immersive Navigation) மற்றும் வேகக் கணிப்பான் (Speedometer) வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அப்டேட், பயணிகளுக்கு தெளிவான வழிகாட்டுதலையும், பாதுகாப்பான ஓட்டத்தையும் வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய AI வழிகாட்டி, சாலைகளின் தெளிவான வரைபடங்கள், மேம்பட்ட காட்சிகள் மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வழிமுறைகளை வழங்குகிறது. இதனால், ஓட்டுநர்கள் தங்கள் பயணத்தை எளிதாக திட்டமிட முடியும்.

ஆரம்பத்தில் சில பயனர்களுக்கே கிடைத்த இந்த வசதி, தற்போது பரவலாக Android மற்றும் iOS பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், Android Auto-வில் வேகக் கணிப்பான் சேர்க்கப்பட்டுள்ளது.
இது, வாகனத்தின் வேகத்தை நேரடியாகக் காட்டும். குறிப்பாக, டிஜிட்டல் டாஷ்போர்டு இல்லாத வாகனங்களில் பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Google, இந்த வசதிகளை server-side update மூலம் வழங்குகிறது. அதனால், பயனர்கள் தனியாக update செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், சில பகுதிகளில் மற்றும் சில சாதனங்களில் இந்த வசதி படிப்படியாக கிடைக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |