Google Map -ஆல் கரும்பு ஜூஸ் கடைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
கூகுள் வரைபடத்தால் வாடிக்கையாளர்கள் கிடைத்ததாக கடை உரிமையாளர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
Google Map -ஆல் கிடைத்த வாடிக்கையாளர்கள்
சமூக வலைதளத்தில் பெண் ஒருவர் பகிர்ந்து கொண்ட அனுபவம் தற்போது வைரலாகி வருகிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் உள்ளூர் கரும்பு ஜூஸ் விற்பனையாளருக்கு உதவிய சம்பவம் தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அந்த பெண் தனது பதிவில் பனசங்கரியில் லதாவின் கரும்புச் சாறு கடையைக் கண்டுபிடித்ததாகவும், அதன் தூய்மை மற்றும் விருந்தோம்பல் குறித்து கூறியுள்ளார்.
அதாவது அவரது பதிவில், "கரும்பு ஜூஸ் கடை வைத்திருக்கும் லதா மிகவும் கடின உழைப்பாளி ஆவார். அந்தப் பகுதியிலேயே மிகவும் தூய்மையான சுகாதாரமிக்க மற்றும் விருந்தோம்பலுக்காக அவர் அறியப்படுகிறார்.
அவரது கடையில் இருக்கும் கண்ணாடி கிளாஸ்கள் அல்லது ஜூஸ் இயந்திரத்தைச் சுற்றி ஈக்கள் இல்லை. மாலை 4 மணி முதல் இட்லி மற்றும் தோசை மாவு அரைக்கும் சேவைகளை வழங்குகிறார்.
காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து நாட்களிலும் கரும்பு ஜூஸ் கடை திறந்திருக்கும்" என்று குறிப்பிட்டு கூகுள் வரைபடத்திலும் அந்த கடையை பட்டியலிட்டுள்ளார்.
இவரின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து "கூகிள் மேப்ஸில் அவரது வணிகத்தைச் சேர்த்ததன் மூலம் மிகப்பெரிய விஷயத்தை நீங்கள் செய்துள்ளீர்கள்" என்று பயனர் ஒருவர் கேட்டுள்ளார்.
அதோடு மற்றொரு பயனர் ஒருவர், "ஒன்லைன் ஆர்டர் மற்றும் டெலிவரி விருப்பங்கள்" குறித்து கேட்டுள்ளார். இதன் மூலம் கரும்பு ஜூஸ் கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |