ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு Google Maps கொடுத்த இன்ப அதிர்ச்சி
Google Maps சில நாட்களுக்கு முன்பு 10 புதிய அப்டேட்களை ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக அறிமுகம் செய்தது.
Google Maps
Google Maps செயலியைக் வழிகாட்டி வசதிகள் உள்ளன. இவை ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பேருதவி ஆக உள்ளது.
இந்த செயலியின் மூலம் எங்கு வேண்டுமானாலும் யாரிடமும் வழி கேட்காமல் பயணிக்கலாம். ஆனாலும், சில சமயங்களில் பயனர்கள் தவறான வழியில் செல்லும் சிக்கலையும் எதிர்கொள்வது உண்டு.
இந்த சூழலில்தான் பயனர்களுக்காக புதிய அப்டேட்களை Google Maps அறிமுகம் செய்துள்ளது.
புதிய அப்டேட்கள்
கூகுளின் GEMINI AI உடன் Maps தற்போது நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் தங்கள் செல்போனை தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபட முடியும்.
சாலையில் ஏற்படும் போக்குவரத்து தடைகள், மாற்றுப்பாதைகள், கட்டுமானம் குறித்த அப்டேட்களை Google Maps வழங்க தொடங்கியுள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்துள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்காக Google Maps புதிய அவதார் வசதியை வழங்கியுள்ளது.
Google Maps மூலம் நேரடியாக மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஆனால், சில குறிப்பிட்ட நகரங்களில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே.
Google Maps இனி, விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளை வாகன ஓட்டிகள் நெருங்கும்போது முன்கூட்டியே எச்சரிக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |