Google Maps இணையம் இல்லாமல் பயன்படுத்துவது எப்படி? Offline Map டிப்ஸ் இதோ!

Google Tech News Maps Google Maps Offline Maps
By Ragavan Dec 30, 2021 12:21 AM GMT
Report

இணையம் இல்லாமலும் Google Maps செயலியை பயன்படுத்துவது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Google Maps பலருக்கும் பல முக்கியமான தருணங்களில் வழிகாட்டியாக இருந்துள்ளது. நீங்கள் உங்கள் மொபைலில் கூகுள் மேப்ஸ் நேவிகேஷனை அமைத்தாலே போதும். எங்கு செல்ல வேண்டுமோ உங்களுக்கு படிப்படியாக வழிகளை காட்ட உதவுவதோடு, டிராஃபிக் பற்றிய தகவல், ஷார்ட் ரூட் உள்ளிட்ட பல தகவலையும் வழங்குகிறது.

எல்லா செயலிகளையும் போலவே, Google Maps இன்டர்நெட் இணைப்பு (Internet) இருந்தால் தான் வேலை செய்யும் என்ற சூழலில், இணையம் இல்லாத இடங்கள் அல்லது நெட்வொர்க் பிரச்சனை இருக்கும் போது, பாதை தெரியாமல் நீங்கள் எங்கேயாவது மாட்டிக்கொள்ளலாம்.

ஆனால், Internet இல்லாமலும் கூகுள் மேப்பை பயன்படுத்தலாம். எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

1. உங்கள் Android மொபைல் அல்லது Apple iOS போனிலும், Google Maps-ஐ ஆஃப்லைனில் (Offline) பயன்படுத்தலாம். உங்கள் சாதனத்தில் Google Maps செயலியை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

2. நீங்கள் செயலியை டவுன்லோடு செய்யும்போது, இன்காக்னிட்டோ (Incognito Mode) மோடில் இருக்கக்கூடாது. இன்டர்நெட் கனக்ஷன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Google Maps இணையம் இல்லாமல் பயன்படுத்துவது எப்படி? Offline Map டிப்ஸ் இதோ! | Google Maps Offline Tips Tricks Android Apple Ios

3. உங்கள் திரையில் மேற்புற வலது மூலையில், தேடல் பேனலில் உங்கள் புரொபைல் புகைப்படம் இருக்கும். அதனை கிளிக் செய்யுங்கள்.

4. உங்கள் திரையில் ஒரு ‘மெனு’ தோன்றும். அந்த மெனுவில் ‘ஆஃப்லைன் மேப்ஸ்’ (offline maps) இருக்கும். நீங்கள் ‘ஆஃப்லைன் மேப்ஸ்’ தேர்வின் கீழே உள்ள ‘select your own map’ (உங்கள் வரைபடத்தை தேர்வு செய்யுங்கள்) என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

5. கிளிக் செய்தவுடன், ஒரு மேப் உங்கள் திரையில் தோன்றும். அந்த மேப்பை நீங்கள் பெரிதாக்கி, எந்த இடம் பற்றிய தகவல் உங்களுக்கு வேண்டும் என்று நீல நிற பெட்டிக்குள் தேர்வு செய்யுங்கள். நீங்கள் இந்த பெட்டியில் இடம் பற்றி தேட முடியாது, இடத்தை தேர்வு செய்ய மட்டுமே முடியும்.

6. நீங்கள் தேர்வு செய்தவுடன், திரையில் கீழே இருக்கும் நீல நிற பாக்ஸ் மீது டாப் செய்து அந்த இடம் பற்றிய மேப்பை டவுன்லோடு செய்யவும்.

7. அவ்வளவு தான். நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்துக்கான கூகுள் மேப் இனி ஆஃப்லைனில் பயன்படுத்தலாம். இந்த தகவல், உங்கள் பதிவிறகப்பட்ட மேப்ஸ் பிரிவில், ஆஃப்லைன் மேப்ஸ் (Offline Maps) பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் பயணிக்கும் போது, நீங்கள் செல்லவிருக்கும் இடத்துக்கான மேப்சை தேர்வு செய்து, உங்கள் வழிகாட்டியாக பயன்படுத்தலாம். எத்தனை மேப்ஸ்களை வேண்டுமானாலும் நீங்கள் டவுன்லோடு செய்யலாம் மற்றும் இணைய இணைப்பு இல்லாமல், டவுன்லோடு செய்த மேப்களை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US