எழுத்து பிழையால் உருவான Google - முதலில் சூட்ட நினைத்த பெயர் என்ன தெரியுமா?
இன்று அனைவராலும் உச்சரிக்கப்படும் Google என்ற பெயர் எவ்வாறு எழுத்துப்பிழை மூலம் உருவானது என்பதை பார்க்கலாம்.
கூகிள் 27 வது பிறந்தநாள்
இன்று கூகிள் என்ற பெயரை உச்சரிக்காத மனிதர்களே உலகில் இருக்க முடியாது என்ற அளவுக்கு கூகிள், மனிதர்களின் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
கூகிள் சர்ச், யூடியூப், ஜிமெயில், கூகிள் மேப், ஆண்ட்ராய்டு என உலகின் கோடிக்கணக்கான மக்கள் கூகிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படியான கூகிள் நிறுவனம், இன்று அதன் 27வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது.
கடந்த 1998 ஆம் ஆண்டு ஸ்டாண்டபோர்ட் பல்கலைக்கழக பட்டதாரிகளான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் கூகிள் என்ற தேடு பொறியை(Search Engine) கரேஜில் துவங்கினர். 1998 செப்டம்பர் 4 ஆம் திகதி, கூகிள் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், அதன் மைல்கல்லை கொண்டாடும் வகையில் கூகிள் செப்டம்பர் 27 ஆம் திகதி பிறந்தநாளை கொண்டாடி வருகிறது.
Google பெயர் உருவான கதை
முதலில் கூகிள் உருவாக்கும் போது அதற்கு பேக்ரப்(BackRub) என பெயரிட திட்டமிட்டனர்.
அதன்பிறகு 1997 ஆம் ஆண்டில் புதிய பெயரிட திட்டமிட்ட போது, Googolplex என்ற பெயரை சூட்ட திட்டமிட்டனர்.
ஆனால், பெயர் நீளமாகவும், உச்சரிக்க கடினமாகவும் இருக்கும் என கருதி, Plex என்பதை நீக்கி விட்டு, Googol என்ற பெயரை வைத்தனர்.
Googol என்பது 1க்கு பின்னால் 100 பூஜ்ஜியம் வரும் எண்ணை குறிக்கும்.
ஸ்டான்ஃபோர்டு பட்டதாரியான சீன் ஆண்டர்சன், Googol.com என்ற பெயரில் டொமைன் பதிவு செய்யும் போது, எழுத்துப்பிழையாக google.com என தட்டச்சு செய்து, அந்த பெயரில் வாங்கி விட்டார்.
இதன் காரணமாக வேறு வழியின்றி, அந்த பெயரையே பயன்படுத்த துவங்கி விட்டனர்.
2015 ஆம் ஆண்டு முதல் கூகிள் ஆல்பாபெட்(Alphabet) என்ற நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
கூகிள் நிறுவனர்களான லாரி பேஜ் 205 பில்லியன் டொலர்களுடன் உலக பணக்காரர் பட்டியலில் 5வது இடத்திலும், செர்ஜி பிரின் 190.2 பில்லியன் டொலர்களுடன் 6வது இடத்திலும் உள்ளனர்.
2015 ஆம் ஆண்டு முதல் கூகிள் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக தமிழ்நாட்டின் மதுரையை பூர்விகமாக கொண்ட சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |