2027-ல் புதிய AI பாதுகாப்பு தரநிலை - Google, OpenAI, Anthropic இணைந்து திட்டம்
Google, OpenAI, Anthropic Plan AI Safety Standard: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான Google, OpenAI, Anthropic ஆகியவை இணைந்து, AI பாதுகாப்பு தரநிலையை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளன.
இந்த அமைப்பு 2026 இறுதியில் அல்லது 2027 தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு தற்காலிகமாக Standards Authority for Frontier AI (SAFA) என பெயரிடப்பட்டுள்ளது.

இது அரசாங்கத்திலிருந்து சுயாதீனமாக செயல்படும். இதன் முக்கிய நோக்கம், AI நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பொது பாதுகாப்பு உறுதிமொழிகளுக்கான நடைமுறை அளவுகோல்களை உருவாக்குவது மற்றும் புதிய AI மாதிரிகளை வணிக பயன்பாட்டிற்கு முன் மதிப்பீடு செய்வதற்கு டெவலப்பர்களுக்கு உதவுவதாகும்.
மேலும், முன்னாள் White House AI ஆலோசகர் ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் ஆரதி பிரபாகர் ஆகியோரிடம் தலைமைப் பொறுப்புக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அமெரிக்காவில் ஏற்கனவே Center for AI Standards and Innovation என்ற அரசு அமைப்பு செயல்பட்டு வந்தாலும், அது போதுமான தொழில்நுட்ப மற்றும் நிதி வளங்களை கொண்டிருக்கவில்லை என்பதால், புதிய SAFA அமைப்பு அவசியமாகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த முயற்சி, AI பாதுகாப்பு குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில் முன்னெடுக்கப்படுகிறது. Google DeepMind நிறுவனர் Demis Hassabis மற்றும் Anthropic CEO Dario Amodei ஆகியோர், AI மாதிரிகள் வெளியீட்டை தற்காலிகமாக மந்தமாக்கி, பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த புதிய தரநிலை, AI தொழில்நுட்ப வளர்ச்சியில் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நம்பிக்கை ஆகியவற்றை உறுதி செய்யும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |