அதிகரித்த செயற்கை நுண்ணறிவு செலவினங்கள்: சந்தை மதிப்பில் $500 பில்லியனை இழந்த ஆல்பபெட்
Google paraent company Alphabet loss 13% stocks: செயற்கை நுண்ணறிவு துறையில் அதிகரித்து வரும் செலவினங்கள் காரணமாக கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனம் மிகப்பெரிய பங்குச் சந்தை சரிவை எதிர்கொண்டுள்ளது.
சரிந்த ஆல்பபெட் நிறுவனத்தின் பங்குகள்
நிறுவனங்களுக்கு இடையே செயற்கை நுண்ணறிவு துறையில் நிலவி வரும் கடும் போட்டிகள் காரணமாக மேற்கொள்ளப்படும் அதிகப்படியான மூலதனச் செலவுகள் குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட்(Alphabet) தங்களுடைய வரலாற்றில் ஒரே நாளில் மிகப்பெரிய பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது.
பங்கு வர்த்தகத்தின் நிலவரப்படி, ஆல்பபெட் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 13% வரை சரிந்துள்ளன.
இதனால் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பில் சுமார் $500 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளது.
பின்னர் வால் ஸ்டிரீட் வர்த்தகத்தில் சிறிது மீண்டு 12% சரிவில் நிலைபெற்றது.

இந்நிலையில், சந்தையில் உயர் மதிப்புகளை கொண்டுள்ள நிறுவனங்கள் தங்களின் காலாண்டு வருவாய் இலக்குகளை எட்ட தவறும் நேரத்தில் இது போன்று பங்குதாரர்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்று சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாறி வரும் தேடல் முறைகள்
உரையாடல் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் வருகையால், பயனர்களின் வழக்கமான தேடுதல் முறைகள் முற்றிலுமாக மாறத் தொடங்கியுள்ளன.
இதனால் பிரதான தேடுபொறியான கூகுளின் தேடுபொறி வணிகத்தின் வளர்ச்சி 12% வரை குறைந்துள்ளது.
இது வால் ஸ்டிரீட் கணித்ததை விட 3% புள்ளிகள் பின்தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.