Google Pay பயனர்களுக்கு அடித்த ஜாக்பாட்! 3 லட்ச ரூபாய் வரை அக்கவுண்டுக்கு வந்த பணம்
Google Pay தற்செயலாக சில பயனர்களின் கணக்கில் ரூ.81,000 வரை க்ரெடிட் செய்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு
கூகுள் பே என்ற மொபைல் பேமெண்ட் சேவையானது தொழில்நுட்பக் கோளாறால் சில பயனர்களின் கணக்குகளில் தொகையை கூடுதலாக வரவு வைத்தது. இந்த பரிவர்த்தனைகளின் தொகை 10 அமெரிக்க டொலர் முதல் 1,000 டொலர் வரை இருந்தது (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.3.3 லட்சம் ஆகும்).
கூகுள் பே பின்னர் இந்த பிழையைக் கண்டறிந்து, முடிந்தவரை கட்டணங்களை திரும்பப்பெற்றது.
இருப்பினும், பயனர்கள் ஏற்கனவே பணத்தை மாற்றியிருந்தால் அல்லது செலவழித்த சந்தர்ப்பங்களில், அவர்களின் கணக்கிலிருந்து பணம் டெபிட் செய்யப்படாது என்று Google Pay தெரிவித்துள்ளது.
AndroidPolice
இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு கூகுள் நிறுவனம் மன்னிப்பும் கேட்டுள்ளது.
பயனர்களுக்கு அடித்த அதிர்ஷடம்
இதனிடையே, சில சமூக ஊடகப் பயனர்கள் இணையத்தைப் பயன்படுத்தி, Google Pay-யில் இருந்து எப்படிப் பணம் பெற்றார்கள் என்பதை விவரித்தார்கள்.
தொழில்நுட்பக் கோளாறால் கிடைத்த பணம் சில சந்தர்ப்பங்களில் திரும்பப்பெறப்பட்டாலும், சில பயனர்கள் கூகுள் பேயின் தடுமாற்றத்தால் அதிர்ஷ்டம் அடைந்ததாக மகிழ்ச்சியடைந்தனர்.