ரூ.15,000 வரை கடன் வழங்கும் கூகுள் பே..! எளிதாக பெறுவது எப்படி?
கூகுள் பே நிறுவனம் பயனர்களுக்கு தேவைப்படும் சிறிய அளவிலான தொகையை கடனாக வழங்கும் புதிய வழிமுறையை தொடங்கியுள்ளது.
கடன் உதவி வழங்கும் கூகுள் பே
என்ன தான் சம்பாதித்தாலும் நம்மில் பலருக்கு மாத இறுதியில் அல்லது திடீரென ஏற்படும் அவசர தேவைகளுக்கு பணம் தேவைப்படும் போது தெரிந்த நபர்களிடமோ அல்லது ஆன்லைன் லோன் நிறுவனங்களிடமோ நாம் பணத்தை கடனாக பெறுகிறோம்.
ஆனால் அதற்கு பல்வேறு வழிமுறைகள் மற்றும் ஆவணங்களை சமர்பிக்க வேண்டி இருக்கும். இந்நிலையில் நமது தினசரி வாழ்வில் பயன்படுத்தும் பணப் பரிவர்த்தனை செயலியான கூகுள் பே-யில் நமக்கு தேவையான சிறிய அளவிலான தொகையை கடனாக வழங்கும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரண மக்களுக்கு தங்கள் வாழ்வில் திடீரென ஏற்படும் பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக டிஜிட்டல் கடன் திட்டத்தை கூகுள் பே(Google Pay) நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு கூகுள் பே நிறுவனம் சாஷட் லோன் என பெயர் வைத்துள்ளது, இதன் மூலம் சிறிய தொழில் செய்யும் வர்த்தர்கள் ரூபாய் 15,000 வரை கடன் உதவி பெற முடியும்.
இவ்வாறு பெற்ற கடனை 7 நாள் முதல் 12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். சிறிய அளவில் வழங்கப்படும் இந்த கடன் உதவிக்கு கூகுள் பே குறிப்பிட்ட சில விவரங்களை மட்டும் பெற்றுக் கொண்டு கடனுக்கான உடனடி அப்ரூவல் வழங்குகிறது.
இதற்காக கூகுள் பே நிறுவனம் ஃபெடரெல் வங்கி, கோடக் வங்கி, மஹிந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சோதனை முயற்சியாக தற்போது இரண்டாம் நிலை நகரங்களில் மட்டுமே இந்த கடன் திட்டத்தை கூகுள் பே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடன் பெறுவது எப்படி?
வர்த்தகத்திற்கான கூகுள் பே ஆப்பை ஓபன் செய்து, அதில் லோன் பிரிவில் இருக்கும் ஆஃபர்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
உங்களுக்கு தேவையான கடன் தொகையை குறிப்பிட்டு, பின்வரும் எளிய நடைமுறையிலான விவரங்களை நிரப்பினால் கடன் உடனடியாக வழங்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Google Pay, GPay, Loan, business, Money, Indian Rupee