எந்த வேலையும் செய்யாத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் கூகிள் நிறுவனம் - ஏன் தெரியுமா?
தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது AI தயாரிப்புகளை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
மெட்டா நிறுவனம் சமீபத்தில், Llama 4 ஐ அறிமுகப்படுத்தியது. அதே போல், Google நிறுவனம் Gemini 2.5 Pro பதிப்பை வெளியிட்டது.
இதே போல், AI நிபுணர்களை தங்கள் நிறுவனத்தில் தக்க வைப்பதற்கான போட்டியிலும், இந்த நிறுவனங்கள் உள்ளது.
வேலை செய்யாமலே ஊதியம்
இதற்காக கூகுள் நிறுவனம் எந்த வேலையும் செய்யாத ஊழியர்களுக்கும் வழங்குகிறது. பிரித்தானியாவை தளமாக கொண்டு செயல்படும் ஊழியர்களுக்கு 'Garden Leave' வழங்கியுள்ளது.
இந்த ஊழியர்கள் கூகிள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகும், வேறு போட்டி நிறுவனங்களில் சேருவதை தடுக்கும் வகையில், அவர்களுக்கு சம்பளம் வழங்கி வருகிறது.
இதற்காக, non-compete ஒப்பந்தத்தில் ஊழியர்கள் கையெழுத்திட்டுள்ளனர். முக்கிய திட்டங்கள் தொடர்பான தகவல்கள், போட்டி நிறுவனங்களுக்கு செல்வதை தடுக்கும் நோக்கில், நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பிறகு, ஒரு வருடத்திற்குள் வேறு நிறுவனத்தில் சேர கூடாது என ஒப்பந்தம் அமைந்துள்ளது.
கூகிள் DeepMind பிரிவின் முன்னாள் ஊழியரும், மைக்ரோசாப்ட் AI துணைத்தலைவருமான nando de freitas, "இந்த ஒப்பந்தத்திலிருந்து விடுபடுவதற்கான வழிகளை கேட்டு, பல ஊழியர்கள் தன்னைத் தொடர்பு கொண்டதாக" சமூக வலைதளத்தில் பகிர்ந்த போது இந்த நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Dear @GoogDeepMind ers, First, congrats on the new impressive models.
— Nando de Freitas (@NandoDF) March 26, 2025
Every week one of you reaches out to me in despair to ask me how to escape your notice periods and noncompetes. Also asking me for a job because your manager has explained this is the way to get promoted, but…
ஐரோப்பாவில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என வலியுறுத்தியுள்ள அவர், இந்த ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
எங்களது வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் சந்தை தரநிலைகளுக்கு ஏற்ப உள்ளதாகவே, கூகிள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
வேலை செய்யாமல் ஊதியம் கிடைத்தாலும், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் AI துறையில், இந்த ஊழியர்கள் தங்களது வாய்ப்பை இழக்க வாய்ப்புள்ளதாகவே நிபுணர்கள் கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |