பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை; Google Pixel 7 Proக்கு பெரும் தள்ளுபடி..
தற்போது தீபாவளி பண்டிகை சீசனில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் பெரும் விழாக்கால விற்பனையை நடத்துகின்றன. இதில், பிளிப்கார்ட் தளத்தில் Google அதன் பிக்சல் போன்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கும் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. போனில் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்? அதன் அம்சங்கள் எப்படி இருக்கின்றன? இது போன்ற முழு விவரங்கள் உங்களுக்காக..
கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 84,999. ஆனால், பிளிப்கார்ட்டில், 24 சதவீதம் தள்ளுபடியுடன் இந்த போனின் விலை 63,999-க்கு கிடைக்கிறது.
அதுமட்டுமின்றி, SBI வங்கி கிரெடிட் கார்டு அல்லது Flipkart Axis Bank Card மூலம் வாங்கினால் பல வாங்கி சலுகைகள் உள்ளன. மேலும், உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் அதிகபட்ச தள்ளுபடியை (ரூ. 48,000 வரை) பெறலாம். அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தினால், இந்த போனை வெறும் 20,000க்கும் குறைவான விலையிலே வாங்கலாம்.
இந்த போனின் சிறப்பம்சங்கள்
கூகுள் பிக்சல் 7 ப்ரோ அம்சங்களைப் பொறுத்தவரை, இது 6.7 இன்ச் குவாட் HD+ OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிலே Refresh Rate 90 ஹெர்ட்ஸ் ஆகும். கூகுள் பிக்சல் 7 ப்ரோ Octocore Tensor G2 செயலியில் இயங்குகிறது. இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
கேமராவைப் பொறுத்த வரையில், இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல், 12 மெகாபிக்சல் மற்றும் 48 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பி எடுக்க 10.8 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த போன் USB Type-C port, 5G, 4G LTE, Wi-Fi 6E, Bluetooth V5.2 போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ஃபோன் வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. பேட்டரி சேவர் மோடு 72 மணிநேர பேட்டரி பயனை வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Google Pixel 7 Pro Offer, Google Pixel 7 Pro Flipkart big Diwali sale, Google Pixel 7 Pro Offer