Google Pixel 8 வெளியீட்டு திகதி அறிவிப்பு; விலை, அம்சங்கள் என்ன?
ஆப்பிள் ஐபோன் 15 அறிமுகப்படுத்தப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, கூகிள் அதன் பிக்சல் 8 சீரிஸ் போன்களை வெளியிடவுள்ளது.
Pixel 8 Series அக்டோபர் 4 வெளியிடப்படும் என Google நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த புதிய பிக்சல் தொடர் இரண்டு மாடல்களைக் கொண்டுள்ளது. இதில் Pixel 8 மற்றும் Pixel 8 Pro ஆகியவை அடங்கும். இந்த புதிய பிக்சல் போன்கள் இன்னும் மேம்பட்ட அம்சங்களுடன் வரும். அதில், பிக்சல் 8 ஒப்பீட்டளவில் மலிவு விலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.
மென்பொருளைப் பொறுத்தவரை, பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ இரண்டும் சிறிய மாற்றங்களுடன் ஒத்ததாக இருக்கலாம். ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் இருக்கலாம். வடிவமைப்பு வாரியாக அதிக மாற்றங்கள் இருக்காது. விவரக்குறிப்புகள் வாரியாக, சில மேம்படுத்தல்கள் இருக்கலாம்.
கூகுள் பிக்சல் 8 அம்சங்கள்:
வடிவமைப்பு:
லீக்ஸ்டர் ஆன்லீக்ஸ் (மைஸ்மார்ட்பிரைஸ்) வழங்கிய ரெண்டர்களின் அடிப்படையில் வரவிருக்கும் பிக்சல் 8 பிக்சல் 7 போலவே இருக்கும். பின்புறத்தில் ஒரு கேமரா பார், பஞ்ச்-ஹோல் கட்அவுட்டன் கூடிய பிளாட் டிஸ்ப்ளே இருக்கும். இரண்டு பின்புற கேமராக்கள் தொடரலாம் என கூறப்படுகிறது.
ப்ரோ மாடலில் பின்புறத்தில் 3 சென்சார்கள் இருக்கலாம். பிக்சல் 8 சீரிஸ் வெள்ளை மற்றும் கருப்பு வண்ண விருப்பங்களில் தொடர்ந்து கிடைக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் பிக்சல் 7 சீரிஸ் போன்களை விட மெல்லியதாகவும் இலகுவாகவும் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
டிஸ்பிலே:
வெண்ணிலா மாடலில் சிறிய டிஸ்பிலே இருக்கலாம். பிக்சல் 8 ஃபோன் 6.17-இன்ச் 120 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே 1,400நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 427 பிபிஐ கொண்டதாக இருக்கலாம். வழக்கமான மாடலில் பிளாட் டிஸ்ப்ளேவுடன் Google ஒட்டிக்கொள்ளலாம்.
மென்பொருள் & செயல்திறன்:
பிக்சல் Samsung Exynos அடிப்படையிலான உள் Tensor G3 chipset மூலம் இயக்கப்படலாம். 24W வேகமான வயர்டு சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் 20W வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 4,485mAh பேட்டரியும் இருக்கலாம். சார்ஜர் இல்லை.
லைவ் மொழிபெயர்ப்பு, photo blur மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல AI, ML (மெஷின் லேர்னிங்) திறன்களை Google Pixel ஃபோன்களில் கொண்டுவருகிறது. பிக்சல் 8 ஆனது ஜெனரேட்டிவ் AI போன்ற சில Google Bard AI அம்சங்களை அணுக முடியும்.
கேமராக்கள்:
Google Pixel 8-ல் 50MP GN2 முதன்மை சென்சார், பின்புறத்தில் 12MP IMX386 அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். சிறந்த பொருள் கண்டறிதல் Time-of-Flight (ToF) சென்சார் கூட இருக்கலாம். புதிய அமைப்பு மேம்படுத்தப்பட்ட HDR உடன் ஒளி செயலாக்கத்தை 35 சதவீதம் அதிகரிக்கிறது. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 11MP கேமரா இருக்கலாம்.
விலை:
இதன் விலை விவரம் வெளியீட்டு நிகழ்வு நெருங்கும் நேரத்தில் கசியவாய்ப்புள்ளது. இதற்கு முன்னதாக வெளியான கூகுள் பிக்சல் 7 போன் 8ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ. 59,999 தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த போனும் கிட்டத்தட்ட அதே விலையில் அறிமுகமாகலாம் என கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Google Pixel 8 launch, Google Pixel 8 launch date, Pixel 8, Pixel 8 Pro, Apple iPhone 15, Tensor G3 chipset,Google Pixel 8 Sries