Google Pixel 8 Pro வின் அப்டேட் வீடியோ லீக்
PIXEL 8 மற்றும் PIXEL 8 PRO ஸ்மார்ட்போன்களின் நிறம் மற்றும் STORAGE பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்த நிலையில், தற்போது X தளத்தில் பயனர் ஒருவர் PIXEL 8 ஸ்மார்ட்போனின் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
இதில் PIXEL 8 அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது, மேலும் அவர் பகிர்ந்த வீடியோவின் மூலம், புதிய அம்சம் AUDIO MAGIC ERASER என்று அழைக்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.
லீக் ஆகி இருக்கும் இந்த வீடியோ 14 நொடிகள் ஓடுகின்றன. அதில் ஒரு நபர் ஸ்கேட் போர்டில் செல்வதும், பிறகு AUDIO MAGIC ERASER என்ற பெயர் கொண்ட புதிய அம்சம் இடம்பெற்று இருக்கிறது.
இந்த அம்சம் வீடியோ ஒன்றில் இருக்கும் ஆடியோவை மாற்றியமைக்கவோ அல்லது முழுமையாக நீக்குவதற்கான வசதியை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
கூகுள் நிறுவனம் SOFTWARE அப்கிரேடுகள் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.எனவே MAGIC EDITOR , EMOJI மற்றும் CINEMATIC WALLPAPER உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.
PIXEL 8 மாடலின் டிசைன் பற்றிய விவரங்களும் தற்போது லீக் ஆகி இருக்கும் வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது.
Seems like the new Pixel 8 series will introduce Audio Magic Eraser feature to reduce video background noise.#Pixel8 #Pixel8Pro #GooglePixel pic.twitter.com/Tb23MoDuUI
— EZ (@EZ8622647227573) August 11, 2023
இந்த PIXEL 8 மாடல் ஓரங்கள் வளைந்தும் , மெல்லிய மற்றும் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் புளூ நிறத்தை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |