இணையம் இல்லாமலே வாட்ஸ்அப் அழைப்பு - கூகிள் வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு
இணையம் இல்லாமலே வாட்ஸ்அப் அழைப்பு மேற்கொள்ளும் வசதியை கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
இணையம் இல்லாமலே வாட்ஸ்அப் அழைப்பு
இணைய வசதியால் செயல்படும் வாட்ஸ்அப் செயலியில், 2015 ஆம் ஆண்டில் குரல் அழைப்பு மேற்கொள்ளும் வசதியும், 2018 ஆம் ஆண்டில் வீடியோ அழைப்பு மேற்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், நெட்வொர்க் இல்லாமலே வாட்ஸ்அப் மூலம் குரல் மற்றும் வீடியோ அழைப்பு மேற்கொள்ளும் வசதியை கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி, கூகிள் தனது பிக்சல் 10 தொடரை (Pixel 10 Series) வெளியிட்டது.
இந்நிலையில், நெட்வொர்க் இல்லாத இடத்திலும், செயற்கைகோள் உதவியுடன் வாட்ஸ்அப் வழியாக ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு பேசும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
#Pixel10 has you covered on and off the grid 📍 Pixel devices will be the first to offer voice and video calls on @WhatsApp over a satellite network starting 8/28¹ 🌍 pic.twitter.com/6yDSDMskkK
— Made by Google (@madebygoogle) August 22, 2025
வரும், 28 ஆம் திகதி முதல் பிக்சல் 10 தொடரில் இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வரும் என கூகிள் தெரிவித்துள்ளது.
மேலும், நெட்வொர்க் இல்லாமல் வாட்ஸ்அப் மூலம் குரல் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பு அம்சம் உள்ள உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என கூகிள் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |