கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 சீரிஸ் Smartphoneகள் அறிமுகமானது! சூப்பரான வசதிகள்... விலை என்ன தெரியுமா?
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை பால் நிகழ்வில் அறிமுகம் செய்தது. பிக்சல் 6 மாடலில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் கூகுள் டென்சார் பிராசஸர், டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப், ஆண்ட்ராய்டு 12, ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு ஓ.எஸ். அப்டேட் வழங்கப்படுகிறது.
இரு மாடல்களிலும் 50 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பிக்சல் 6 ப்ரோ மாடலில் 48 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் பிக்சல் 6 ப்ரோ பிக்சல் 6 மாடலில் 8 எம்பி செல்பி கேமரா, பிக்சல் 6 ப்ரோ மாடலில் 11 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
பேட்டரியை பொருத்தவரை பிக்சல் 6 மாடலில் 4614 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் வழங்கப்பட்டு உள்ளது. பிக்சல் 6 மாடல் ஸ்டாமி பிளாக், கைண்டா கோரல் மற்றும் சோர்டா சீபோம் நிறங்களில் கிடைக்கிறது.
பிக்சல் 6ன் விலை இலங்கை மதிப்பில் சுமார் 1,20,379.94 வரை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.