தமிழ்நாட்டிற்கு வரும் இரண்டு திட்டங்கள்..சுந்தர் பிச்சை தரப்பில் எடுத்த முடிவு
கூகுள் தனது பிக்சல் போன்களை தமிழ்நாட்டில் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள்
இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. கிளவுட் சேவையில் ஆதிக்கம் செலுத்தும் கூகுள், Electronics பிரிவில் தனது வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
மாபெரும் வர்த்தக சந்தையாக இருக்கும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போன்களை உலகம் முழுதும் விற்க கூகுள் முடிவு செய்துள்ளது.
இதற்காக தமிழ்நாட்டில் பிக்சல் போன்களை தயாரிக்க, பிரபல ஐபோன் உற்பத்தியாளர் Foxconn நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
டிரோன் திட்டம்
அதே சமயம் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு எடை குறைவான, தானியங்கி டிரோன் Delivery சேவையை வழங்கும் Wing LLC எனும் கூகுளின் துணை நிறுவனம் மூலம், தமிழ்நாட்டில் டிரோன்களையும் தயாரிக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தலைமையில் பல அரசு அதிகாரிகள் உடன் அமெரிக்காவில் கூகுள் நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னைக்கு விரைந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, கூகுள் மற்றும் பாக்ஸ்கான் முத்தரப்பு பேச்சுவார்த்தை உறுதியானால், சென்னையில் புதிய தொழிற்சாலை கூகுள் நிறுவனத்திற்காக உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |