இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் கூகுளின் டூடூல்
இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு டூடூல் ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.
சிறப்பு டூடூல்
உலக நாடுகளில் உள்ள பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் மற்றும் சிறப்பு நாள்களை கொண்டாடும் வகையில் புதிய டூடூல்களை (Doodle) கூகுள் வெளியிடுவது வழக்கமான ஒன்று தான்.
அந்த வகையில், ஆகஸ்ட் 15 ஆம் திகதியான இன்று இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடூல் ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.
இந்த டூடூலில் இந்தியாவின் நெசவு தொழிலை சிறப்பிக்கும் வகையில், பல மாநிலங்களில் நெசவு செய்த செய்த ஆடைகளை கொண்டு வடிவமைக்கப்பட்டது போல இருக்கிறது.
சுதந்திர தினமான இன்று கூகுள் வெளியிட்ட இந்த டூடூலை புதுடெல்லியைச் சேர்ந்த நம்ரதா குமார் என்பவர் வடிவமைத்துள்ளார்.
டூடூலில் உள்ள அம்சங்கள்
இந்த டூடூலில் தமிழகத்தின் காஞ்சிபுரம் பட்டு, உத்தர பிரதேசத்தின் பனாரசி புடவை, பஞ்சாபின் புல்கரி எம்பிராய்டரி, ராஜஸ்தானின் லெகரியா டை, மகாராஷ்டிராவின் பைதானி நெசவு மற்றும் மேற்கு வங்காளத்தின் கந்தா எம்பிராய்டரி உள்ளிட்ட 21 வகையான நெசவு மாதிரிகளின் படங்கள் அடங்கியுள்ளன.
சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!#IndependenceDayIndia | #GoogleDoodle pic.twitter.com/QeT8QVIZbD
— ChannelVision (@iChannelVision) August 15, 2023
மேலும் இதுகுறித்து நம்ரதா குமார் கூறும் போது, "இந்தியாவில் உள்ள மாநிலங்களின் ஒவ்வொரு நெசவு முறையும் தனித்துவமானது. இந்தியாவின் நெசவு பாரம்பரியத்தை எடுத்துரைக்கவே இந்த டூடுலை வடிவமைத்தேன். இது இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |