YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த தடை
யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
யூடியூப் ஸ்டோரீஸ்
கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
@getty images
இதன் மூலம் யூடியூப் பயனர்கள் தாங்கள் என்ன வீடியோவை பதிவேற்றுகிறோம் என்பதை, முன்னோட்டமாக அறிவிப்பதாக ஸ்டோரீஸ் என்ற வசதி பயன்படுத்தப்பட்டது.
குறிப்பாக பத்தாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்டிருக்கும், யூடியூபர்களுக்கு மட்டுமே இந்த பிரத்யேக வசதி அளிக்கப்பட்டு வந்தது.
இந்த வசதியை பயன்படுத்தலாம்
இதில் போதிய வரவேற்பு கிடைக்காத காரணத்தால், இந்த வசதியை யூடியூப் செயலியிலிருந்து ஜீன் 26ஆம் திகதி முதல், நீக்க போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த ஸ்டோரீஸ்களும், அடுத்த மாதம் 26ஆம் திகதியிலிருந்து 7 நாட்களுக்குள் நீக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த ஸ்டோரிஸ்களுக்கு பதிலாக, கம்யூனிட்டி போஸ்ட் அல்லது ரீல்ஸ் வழியாக, யூடியூபர்கள் தங்களது கதைகளை தெரிவிக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்டோரீஸ் வசதியை நீக்குவதன் மூலம் like Shorts, Community posts, live videos போன்றவற்றை அதிகம் பேர் பயன்படுத்துவார்கள் என்பதால், அந்த வசதிக்கு தடை விதிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.