இந்தியாவில் கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் உற்பத்தி தொடங்கியது! பயன்கள் என்னென்ன?
இந்தியாவின் தொழில்நுட்ப உற்பத்தி பயணத்தில் திருப்புமுனையாக கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் உற்பத்தியை தொடங்கியுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி
இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு முக்கிய ஊக்கமாக, கூகுள் தனது முன்னணி ஸ்மார்ட்போனான பிக்சல் 8 ஐ இந்தியாவிலேயே உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. கூகுள் முதல் முறையாக இந்தியாவில் நேரடியாக பிக்சல் சாதனங்களை தயாரித்து இருப்பதால் இது முக்கியமான தருணமாகும்.
Excited to announce that the first of our Made in India Google #Pixel8 devices have started rolling off the production lines ?
— Google India (@GoogleIndia) August 12, 2024
Grateful for the partnership with Hon'ble Minister @AshwiniVaishnaw as we look forward to bringing the #TeamPixel experience to people across India ? pic.twitter.com/6nKvvcyFkj
ஆகஸ்ட் 13ம் திகதி அன்று நடைபெற இருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'மேட் பை கூகுள்' நிகழ்வுக்கு சற்று முன்னதாகவே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வில் அடுத்த தலைமுறை பிக்சல் 9 தொடர் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மூலோபாய பயன்கள்
ஸ்மார்ட்போன்களின் பிரீமியம் பிரிவில் குறிப்பாக இந்தியாவின் வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் சந்தையை தன் வசமாக்க உள்ளூர் உற்பத்தி மூலம் கூகுள் இலக்கு வைத்துள்ளது.
உள்ளூர் உற்பத்தி இறக்குமதி வரியை தவிர்க்க உதவும் என்பதால், பிக்சல் சாதனங்கள் பலதரப்பட்ட போட்டிகளுக்கு நடுவே குறைந்த விலையில் கிடைக்கும்.
Out with the old. In with the fold. Google Pixel 9 Pro Fold, for the first time in India. ✨
— Google India (@GoogleIndia) July 19, 2024
Learn more at: https://t.co/72BVe5FKyB pic.twitter.com/5b0cAFs0qd
கூகுள் நிறுவனத்தின் இந்த முயற்சியானது இந்திய உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்சல் வெளியீடுகள் குறுகிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் மற்றும் ஆதரவு சேவைகளின் வலைப்பின்னல் மேம்படுத்த முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |