கூகுளின் பட்ஜெட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்: Pixel 9a பற்றிய கசிந்த தகவல்கள்!
கூகுளின் வரவிருக்கும் பட்ஜெட் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான பிக்சல் 9ஏ குறித்த கசிந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
Pixel 9a வெளியீடு
Google-ன் Pixel 9a ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கபடும் நிலையில், சமீபத்திய கசிவுகள் இந்த ஸ்மார்ட்போன் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.
முந்தைய பிக்சல் மாடல்களின் ஒரு அடையாளமாக இருந்த கேமரா பார் அல்லது visor இல்லாதது மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும்.
OnLeaks and Android Headlines just shared the CAD renders of the Google Pixel 9a!
— Alvin (@sondesix) September 30, 2024
It looks like they have made several changes to the design on the back side, with no signature Pixel camera bar this time.
This makes the design look boring to me, honestly.
The rest of the phone… pic.twitter.com/TTe3ZwT7gm
கேமரா
கேமரா தொழில்நுட்பத்தை பொறுத்தவரை, Pixel 9a அதன் முன்னோடிகளில் காணப்பட்ட 64MP சென்சாரை விட 48MP முக்கிய கேமரா சென்சாரை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த 48MP யூனிட் கூகுளின் பிரீமியம் மடிப்பு ஸ்மார்ட்போனான Pixel 9 Pro Fold பயன்படுத்தப்படுவதாகும்.
ultrawide கேமரா பிக்சல் 8 ஏ-யில் இருந்து மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 13 MP சென்சரை கொண்டது.
செல்ஃபி கேமராவும் அதன் முன்னோடியைப் போலவே இருக்க வாய்ப்புள்ளது.
Add Me அம்சம்
Pixel 9a-க்கான ஒரு அற்புதமான புதிய அம்சம் "Add Me" என்று கூறப்படுகிறது.
முதன்முறையாக பிக்சல் 9 தொடருடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த AI- இயங்கும் கருவி, நீங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் உள்ள புகைப்படங்களில் டிஜிட்டல் முறையில் ஆட்களை சேர்க்க அனுமதிக்கிறது.
இதன் மூலம் புகைப்படங்களை எடுக்க அந்நியர்களின் உதவி தேவையற்றதாக மாறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |