கூகுளில் மறந்தும் கூட இதையெல்லாம் தேடாதீர்கள்! காரணம் இதுதான்
உலகத்தில் எதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தாலும் கூகுள் நமக்கு பேருதியவியாக இருக்கிறது.
இப்படியாக நமக்கு தெரியாத விஷயங்களின் பதில்களை அறிய உடனடியாக ‘கூகுளிங்’ செய்து பார்க்க நம்மில் பெரும்பாலோர் பழகிவிட்டோம்.
கூகுளில் பல ஆபத்துகளும் உள்ளன, அதன்படி எக்காரணத்தை கொண்டும் கூகுள் வழியாக சில விடயங்களை தேட வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறீர்கள்!
ஓன்லைன் பேங்கிங்
ஒருவேளை உங்கள் வங்கியின் சரியான அதிகாரப்பூர்வ URL ஆனது உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை கண்டுபிடிக்க வெறுமனே உங்கள் வங்கி பெயரை டைப் செய்து ஆன்லைன் பேங்கிங் என்று தேடுவதை தவிர்க்கவும்.
ஏனெனில் கூகுளில் பல போலியான ஆன்லைன் பேங்கிங் வலைத்தளங்கள் உள்ளன. பெரும்பாலான போலியான வலைத்தளங்கள் ஆனது குறிப்பிட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் போல தோற்றமளிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
கஸ்டமர் கேர்
இது மிகவும் பிரபலமான ஆன்லைன் மோசடிகளில் ஒன்றாகும். இம்மாதிரியான மோசடிகளில் ஈடுபடுவபர்கள் போலியான வணிக பட்டியல்களையும், கஸ்டமர் கேர் எண்களையும் வலைத்தளங்களில் பதிவு செய்து வைத்திருப்பார்கள்.
அதை உண்மை என்று நம்பி அவர்களின் கையில் சிக்கும் வாடிக்கையாளர்களிடம் விலாசம் அல்லது வங்கி விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் தொடங்கி பணம் பறிப்பு வரையிலான மோசடிகள் கட்டவிழ்க்கப்படும்.
ஆப்ஸ்
நீங்கள் எதாவதொரு மொபைல் ஆப்பை டவுன்லோட் செய்ய விரும்பினால், தயவு செய்து வெறுமனே அதன் பெயரை டைப் செய்து கூகுள் வழியாக தேட வேண்டாம்.
அது Android ஆப் என்றால் Google Play-விற்கு செல்லவும் அல்லது அது ஐஓஎஸ் ஆப் என்றால் ஐபோன்களுக்கான ஆப் ஸ்டோருக்கு செல்லவும்.
சமூக வலைத்தள லாகின்
சமூக வலைத்தள ஆப்-கள் மூலம் எப்போதும் லாகின் செய்ய அறிவுறுத்தப்படுகிறது, சமூக வலைத்தள அக்கௌன்ட்களை கூகிளில் இருந்து லாகின் செய்யாதீர்கள். கூகுள் மூலம் லாகின் செய்வது ஃபிஷிங்கிற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
தனிப்பட்ட நிதி மற்றும் பங்குச் சந்தை
ஆரோக்கியத்தைப் போலவே, தனிப்பட்ட நிதி என்பது அனைவருக்கும் தனிப்பட்டது. எல்லோரையும் பணக்காரர்களாக்கும் ஒரு முதலீட்டுத் திட்டம் இருக்கவே முடியாது. எனவே, முதலீடு செய்யும் போது கூகுள் தேடல் முடிவுகளில் இருந்து ஆலோசனை பெறுவதை தவிர்க்கவும்.
ஆன்டி வைரஸ்
ஆன்டி வைரஸ் ஆப்ஸ் அல்லது மென்பொருளைத் தேடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அங்கு ஏராளமான போலி தயாரிப்புகள் உள்ளன மற்றும் அசல் தயாரிப்புகளை அடையாளம் காண்பது கடினம்.
New York Post)