சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னையின் ஒரு சிறிய வீட்டில் வசித்து, தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை பல கோடிக்கு சொந்தக்காரர் ஆவார்.
இவருடைய விடாமுயற்சிக்கும் சொத்து மதிப்பிற்கும் அடிக்கடி இணையத்தில் பேசப்பட்டு வருவார்.
அந்தவகையில் தற்போது அவருடைய மனைவி அஞ்சலி பிச்சையின் ஆடம்பர வாழ்க்கை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் இந்த அஞ்சலி பிச்சை?
இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) வேதியியல் பொறியியல் பட்டதாரியான அஞ்சலி, தொழில்நுட்பத் துறையில் தனது கணவரின் வெற்றியைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையைக் கொண்டுள்ளார்.
அவர் Accenture வணிக ஆய்வாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் முன்னணி நிதி மென்பொருள் நிறுவனமான Intuit சென்றார், அங்கு அவர் தற்போது ஒரு முக்கிய நிர்வாகப் பதவியை வகிக்கிறார்.
அஞ்சலி பிச்சையின் தந்தை ஒளராம் ஹர்யானி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். மேலும் 54 வயதான அஞ்சலியும் 52 வயதான சுந்தரும் IIT-இல் இளங்கலை பொறியியல் மாணவர்களாக இருந்தபோது சந்தித்தனர்.
"IIT கரக்பூர் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது, ஏனென்றால் நான் என் அன்பு மனைவி அஞ்சலியை முதன்முதலில் சந்தித்த இடம் அதுதான், நான் வளர்ந்த எனது இரண்டாவது வீட்டைப் பற்றிய இனிமையான நினைவுகள் எனக்கு உள்ளன," என்று சுந்தர் பிச்சை ஒருமுறை கூறியுள்ளார்.
இவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றி தனிப்பட்ட ரீதியில் இருந்தாலும், இவர்களுக்கு காவ்யா என்ற மகள் மற்றும் கிரண் என்ற மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அஞ்சலி பிச்சையின் சொத்து மதிப்பும் கார் சேகரிப்பு குறித்த ஒரு சில தகவல்கள் வெளியாகி வருகின்றது.
அஞ்சலி பிச்சையின் நிகர மதிப்பு
அஞ்சலி பிச்சையின் நிகர மதிப்பு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.830 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அவரது கணவர் சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.10,800 கோடி. சுந்தர் பிச்சை உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவர் ஆவார்.
சுந்தர் மற்றும் அஞ்சலி பிச்சையின் கார் சேகரிப்பு
சுந்தர் பிச்சை மற்றும் அவரது மனைவி ரூ.3.21 கோடி மதிப்புள்ள Mercedes Maybach S650 காரை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. சுந்தர் பிச்சையின் Mercedes Maybach S650 காரில் 6.0 லிட்டர் twin-turbo V12 எஞ்சின் உள்ளது மற்றும் மணிக்கு 190 கிமீ வேகத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |