450 இந்திய பணியாளர்களை அதிரடியாக நீக்கிய கூகுள்!
கூகுள் நிறுவனம் 450 இந்திய பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
ஆட்குறைப்பு நடவடிக்கை
உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனம் தற்போது விற்பனை, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல துறைகளில் தங்களுக்காக பணியாற்றும் 450 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் மாற்று வாய்ப்புக்காக பதிவிட்டதன் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
Laura Morton for The New York Times
இந்தியப் பிரிவு தலைவர்
இதுதொடர்பாக கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் சஞ்சய் குப்தா கூறுகையில், 'ஜனவரியில் அறிவிக்கப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையின்படி கூகுளில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வந்த இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வியாழக்கிழமை பணிநீக்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூகுள் தெரிவித்த நிலையில், தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் யூடியூப்பின் CEO சூசன் வோஜ்சிக்கி பதிவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்திய-அமெரிக்காவைச் சேர்ந்த நீல் மோகன் வீடியோ பிரிவு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.