சுந்தர் பிச்சைக்கு ஒரு கெட்ட செய்தி... ரூ 300 கோடி அபராதம் செலுத்தவிருக்கும் கூகிள்
அவுஸ்திரேலியாவின் இரண்டு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டி எதிர்ப்பு ஒப்பந்தங்களில் ஈடுபட்டதற்காக 55 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் அபராதம் செலுத்த கூகிள் ஒப்புக்கொண்டுள்ளது.
36 மில்லியன் டொலர்
கூகிள் நிறுவனத்தின் அந்த நகர்வு சில ஸ்மார்ட்போன்களில் போட்டி தேடுபொறிகளை நிறுவுவதை கட்டுப்படுத்தியது என்று கூகிள் நிறுவனமும் அவுஸ்திரேலிய போட்டி ஒழுங்குமுறை ஆணையமும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் ACCC அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கையில், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட கூகிளின் ஆசிய பசிபிக் பிரிவுக்கு எதிராக ஃபெடரல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட 36 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ 313 கோடி) அதாவது 55 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் அபராதம் என்பது பொருத்தமானதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மார்ச் 2021 வரை 15 மாதங்களுக்கு நடைமுறையில் இருந்த போட்டி எதிர்ப்பு ஒப்பந்தங்களின் கீழ், Telstra மற்றும் Optus ஆகிய நிறுவனங்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் ஆண்ட்ராய்டு போன்களில் முன்பே நிறுவப்பட்ட கூகிள் தேடலை பயன்படுத்தின.
போட்டியைக் குறைக்கும்
வேறு நிறுவனங்களின் தேடுபொறிகள் விலக்கப்பட்டன. அதற்கு ஈடாக, அந்த வாடிக்கையாளர்களிடமிருந்து கூகிள் ஈட்டிய விளம்பர வருவாயில் ஒரு பங்கை Telstra மற்றும் Optus தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெற்றன.
இந்த ஒப்பந்தங்கள் போட்டியைக் கணிசமாகக் குறைக்கும் என்பதை கூகிள் ஒப்புக்கொண்டுள்ளது. போட்டிகளைக் கட்டுப்படுத்தும் நடத்தை என்பது அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமானது,
ஏனெனில் இது பொதுவாக குறைவான தெரிவு, அதிக செலவு அல்லது நுகர்வோருக்கு மோசமான சேவையை வழங்கும் நிலையை குறிக்கிறது என்றே விசாரணை ஆணையம் பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |