தென் இந்தியாவில் 1.3 லட்சம் கோடியில் AI மையம் அமைக்கும் கூகிள் - எந்த மாநிலத்தில்?
உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகிள், இந்தியாவில் அதனது AI மையத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆந்திராவில் கூகிள் AI மையம்
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டொலர்(ரூ.1.30 லட்சம் கோடி) மதிப்பில் செயற்கை நுண்ணறிவு மையத்தை கூகிள் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
புது தில்லியில் கூகிள் நடத்திய பாரத் AI சக்தி நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்; நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன்; ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் கூகிள் கிளவு CEO தாமஸ் குரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவிற்கு வெளியே இது கூகிள் செய்யும் பாரிய முதலீடாகும். இந்த புதிய தரவு மைய வளாகம் செயல்பாட்டிற்கு வந்ததும், 12 நாடுகளில் பரவியுள்ள கூகிளின் தற்போதைய AI தரவு மையங்களின் வலையமைப்பில் இணையும்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கூகிள் CEO சுந்தர் பிச்சை, "விசாகப்பட்டினத்தில் முதல் ஏஐ மையத்தை கூகுள் நிறுவனம் அமைக்கவுள்ளது. இது தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது.
Great to speak with India PM @narendramodi @OfficialINDIAai to share our plans for the first-ever Google AI hub in Visakhapatnam, a landmark development.
— Sundar Pichai (@sundarpichai) October 14, 2025
This hub combines gigawatt-scale compute capacity, a new international subsea gateway, and large-scale energy infrastructure.…
ஜிகாவாட் அளவிலான கம்ப்யூட்டர் திறன், புதிய சர்வதேச கடலுக்கடி இணைய இணைப்பு மற்றும் பாரிய உள்கட்டமைப்பு ஆகியவற்றை இந்த மையம் ஒருங்கிணைக்கிறது.
இதன் மூலம் இந்தியாவின் பயனர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கும் கூகுளின் அதிநவீனத் தொழில்நுட்பத்தை கொண்டு சென்று, ஏஐ கண்டுபிடிப்புகளைத் துரிதப்படுத்தி, நாடு முழுவதும் வளர்ச்சியை ஊக்குவிக்கும்" என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய இந்திய பிரதமர் மோடி, "ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் கூகிள் AI மையம் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. ஜிகாவாட் அளவிலான தரவு மைய உள்கட்டமைப்பை உள்ளடக்கிய இந்த முதலீடு, ஒரு விக்ஸித் பாரத்தை உருவாக்குவதற்கான எங்கள் தொலைநோக்கு திட்டத்துடன் ஒத்துப்போகிறது.
Delighted by the launch of the Google AI Hub in the dynamic city of Visakhapatnam, Andhra Pradesh.
— Narendra Modi (@narendramodi) October 14, 2025
This multi-faceted investment that includes gigawatt-scale data center infrastructure, aligns with our vision to build a Viksit Bharat. It will be a powerful force in… https://t.co/lbjO3OSyMy
இது அனைவருக்கும் AI அணுகலை உறுதி செய்யும், நமது குடிமக்களுக்கு அதிநவீன கருவிகளை வழங்கும், நமது டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மற்றும் உலகளாவிய தொழில்நுட்பத் தலைவராக இந்தியாவின் இடத்தைப் பாதுகாக்கும்!" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |