Google உங்களை எல்லா நேரமும் கண்காணிக்கிறது என்பது தெரியுமா? உடனே இதை மாத்திடுங்க... இனி நீங்க தேடுவதை அவங்க பார்க்க முடியாது
யாரேனும் உங்களுக்கு தெரியாத ஒரு கேள்வியை கேட்டு விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனடியாக கூகுள் செய்வீர்கள், அப்படித்தானே?
அந்தளவுக்கு கூகுளின் தேவை இன்று அத்தியாவசமாகிவிட்டது!
இப்படிப்பட்ட கூகுள் நம்முடைய அனைத்து அசைவுகளையும் கண்காணிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
கூகுளில் நாம் தேடுவதில் இருந்து நமது மொபைலில் நாம் பார்க்கும் விளம்பரம், வீடியோக்கள் மற்றும் பிற தகவல்களையும் கூகுள் பதிவு செய்கிறது.
இதிலிருந்து விடுபட சில மாற்றங்களை செய்ய வேண்டும். ஆனால், இதன் மூலம் நீங்கள் உங்களுக்கென உள்ள கஸ்டமைசேஷன் (customization) வசதியை இழப்பீர்கள். இணையத்தில் உங்களுடைய கூகுள் அக்கவுண்டுக்கு செல்லுங்கள். இதில் மொத்தம் 6 பிரிவுகள் உள்ளன.
இதில் முதல் இரண்டு பிரிவுகள் வெப் மற்றும் ஆப் செயல்பாடு தொடர்பானது. Chrome-ல் நுழையும் போது, நீங்கள் தேடும் அனைத்து தகவல்களும் சேமிக்கப்பட்டு இருக்கும். இதில் மேலே சென்று பார்த்தல் தேதி வாரியாக உங்கள் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதில் நீங்கள் பில்டர் ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள். இப்போது delete பட்டனை க்ளிக் செய்து அழிக்கலாம்.
மேலும் அப்பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகள் (symbol) க்ளிக் செய்து, தனிப்பட்ட தரவுகளையும் நீக்கலாம். சமீபத்தில் கூகுள் வெளியிட்ட அறிக்கையின் படி, மூன்று மாதங்களுக்கு மேல் அல்லது 18 மாதங்களுக்கு மேல் உள்ள தகவல்களை கூகுள் தானாகவே நீக்கி விடும் என கூறப்பட்டுள்ளது.