Google Pay பயனர்களுக்கு இலவசமாக வந்த ரூ.88,000! காரணம் இது தான்
கூகுள் பே (Google Pay) பயனர்களுக்கு இலவசமாக $1072 டொலர் வரை பணம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் பே பயனர்களுக்கு வந்த பணம்
மொபைல் பரிவர்த்தனை செயலிகளில் கூகுள் பே முன்னணி செயலியாக உள்ளது. இந்நிலையில், கூகுள் பே பயனர்கள் சிலருக்கு சுமார் $1072 டொலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 88,000 ரூபாய்) வரை பணம் இலவசமாக வந்துள்ளதாக பல்வேறு பயனர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
@gettyimages
கூகுள் பே செயலியில் கூகுள் நிறுவனம் தற்போது ஒரு புதிய பரிவர்த்தனை சேவையை சோதனை செய்து வருகிறது.
தற்போதைய சூழலில் இந்த பரிவர்த்தனை சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. மாறாக, கூகுள் ஊழியர்கள் மத்தியில் சோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.
தொழில்நுட்ப கோளாறு
இந்த சோதனை ஓட்டத்தின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூகுள் ஊழியர்களுக்கு பதிலாக சில கூகுள் பே (Google Pay) பயனர்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், பல்வேறு நபர்கள் தங்களுக்கு வெவ்வேறு அளவிலான தொகையில் பணம் வந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
Uhhh, Google Pay seems to just be randomly giving users free money right now.
— Mishaal Rahman (@MishaalRahman) April 5, 2023
I just opened Google Pay and saw that I have $46 in "rewards" that I got "for dogfooding the Google Pay Remittance experience."
What. pic.twitter.com/Epe08Tpsk2
பெரும்பாலானவர்களுக்கு சாதாரண அளவிலேயே தொகை செலுத்தப்பட்டுள்ளது. எனினும், அதிகபட்சமாக 1072 டாலர் வரை பணம் வந்துள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை எத்தனை பேருக்கு இதுபோல பணம் அனுப்பப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. அதேபோல எவ்வளவு தொகை மொத்தமாக செலுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரியவில்லை.
செலுத்தப்பட்ட தொகையை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.