கூகுள் நிறுவனத்தின் AI ஜெனிசிஸ் கருவி: நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன!
கூகுள் நிறுவனத்தின் புதிய செயற்கை நுண்ணறிவு கருவியான Genesis பத்திரிகை துறைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
OpenAI நிறுவனம் Chat GPT என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் இருந்து பல்வேறு நிறுவனங்களும் AIயை தொழில்நுட்பத்தை வைத்து போட்டியில் களமிறங்கியுள்ளன.
அந்த வகையில் OpenAI நிறுவனத்தின் ChatGPTக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் பார்டு ஏஐ என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.
ஆனால் கூகுள் நிறுவனம் அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் தற்போது AIயை தொழில்நுட்பத்தை வைத்து பல்வேறு கருவிகளை வடிவமைத்து வருகிறது.
அதனடிப்படையில் கூகுள் நிறுவனம் AIயை தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ஜெனிசிஸ் என்னும் கருவியை உருவாக்கி வருகிறது.
பத்திரிக்கை துறைக்கு பெரிதும் உதவும்
இந்த ஜெனிசிஸ் கருவி பத்திரிக்கையாளர்களுக்கு அவர்களது வேலையை எளிதாக்க உதவக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சோதிப்பதற்காக நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற முன்னணி அமெரிக்க பத்திரிகை நிறுவனங்களுக்கு கூகுள் நிறுவனம் இந்த கருவியை வழங்கியுள்ளது.
இது கருத்து திருட்டு, துல்லியம், வதந்திகளை களைவது, மற்றும் கட்டுரை உருவாக்கம் ஆகியவற்றில் உதவக்கூடும் என தெரியவந்துள்ளது.
பத்திரிகை துறைக்கு இத்தகைய AI தொழில்நுட்பம் முழுமையாக வந்த பிறகே அது பத்திரிகை துறையில் எத்தகைய மாற்றங்களை எதிர்காலத்தில் உருவாக்கும் என்பதை முடிவு செய்யப்படும் என கூகுள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |