ஊடகத்துறையில் ஏற்படும் மாற்றம்? பத்திரிகையாளர்களுக்காக AI கருவியை உருவாக்கும் கூகுள்!
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பத்திரிகையாளர்களுக்காக கருவியை கூகுள் உருவாக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு
AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுப்டம் பல துறைகளில் வேகமாக நுழைந்து வருகிறது. குறிப்பாக, ஹாலிவுட் திரைத்துறையில் AI-யின் பயன்பாட்டிற்கு எதிராக போராட்டங்கள் எழுந்துள்ளன.
AFP
இந்த நிலையில் அச்சு ஊடகத்துறையில் AI தொழில்நுட்பத்தை புகுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. CNN வெளியிட்டுள்ள செய்தியில், கூகுள் உருவாகும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவி மூலம் News Publishers தங்கள் செய்திகளில் கட்டுரை உரை, தலைப்பு செய்திகளை உருவாக்குவது போன்ற பயன்பாடுகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
David Paul Morris
The Tech Giantயின் அறிக்கை
தொழில்நுட்ப நிறுவனமான The Tech Giantயின் அறிக்கையில், Newsroomகளில் AI கருவியைப் பயன்படுத்துவது தொடர்பான செய்தி நிறுவனங்களுடன் கூட்டு சேர விரும்புவதாக தெரிவித்துள்ளது.
ஆனால், ஒன்லைனில் தகவல் மீது பயிற்சி அளிக்கப்பட்ட இந்தக் கருவிகள் உண்மைகளை தவறாகப் பெறுவதற்கான அல்லது மாயத்தோற்ற பதில்களை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஒருபுறம் கவலைகளும் எழுந்துள்ளன.
Bing Image Creator
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |