பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர்
உலகளாவிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கி பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கோபிசந்த் இந்துஜா நீண்ட கால நோயால் காலமானார்.
கோபிசந்த் இந்துஜா
இந்திய நிறுவனமான இந்துஜா குழுமத்தின் உரிமையாளரான இந்துஜா குடும்பத்திற்கு தலைமை தாங்கியவர் கோபிசந்த் இந்துஜா.
GP என்று அழைக்கப்பட்ட இவரது சொத்து மதிப்பு, 2024ஆம் ஆண்டில் 35.3 பில்லியன் பவுண்டுகள் என்று மதிப்பிடப்பட்டது.
இவர் தனது மூன்று சகோதரர்களுடன் சேர்ந்து பிரித்தானியாவில் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.
இந்தியரான கோபிசந்த், 1970களில் தனது சகோதரர்களுடன் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். கம்பளங்கள், தேநீர் மற்றும் மசாலா பொருட்களை வர்த்தகம் செய்யும் ஒரு சாதாரண நடவடிக்கையாக தொழிலைத் தொடங்கினார். 
உலகளாவிய ஒரு நிறுவனம்
பின்னாளில் வங்கி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் பொழுதுபோக்கு வரை பரவிய உலகளாவிய ஒரு நிறுவனமாக மாற்றினார்.
இந்த நிலையில் 85 வயதான கோபிசந்த் இந்துஜா நீண்ட கால நோயால் காலமானார். அவரது உறவினர்கள் வெளியிட்ட அறிக்கையில்,
"அவர் பணிவாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார். மேலும் அவர் சந்தித்த அனைவருக்கும் ஒரு நண்பராகவும் இருந்தார். அவர் எங்கள் குடும்பத்தின் இதயத்தில் ஒரு ஆழமான ஓட்டையை விட்டுச் செல்வார். அவரது மகத்தான பணிக்காகவும் அவர் நினைவுக்கூரப்படுவார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |