அடுத்த கைது கோட்டாபய மற்றும் மைத்திரி தான்! இலங்கை அமைச்சர் உறுதி
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச மீது லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட உள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் மீதான இந்த புகார்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, உரிய ஆதாரங்களுடன் புகார்கள் வழங்கப்பட்டால் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
பொது சொத்துகளை தவறாக பயன்படுத்திய பல குற்றச்சாட்டுகளின் கீழ் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச மீது புகார்களை ஊழல் எதிர்ப்பு மற்றும் மோசடி எதிர்ப்பு சிவில் அமைப்புகள் முன்வைக்க உள்ளன.
திரட்டப்படும் ஆதாரங்கள்
இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்த நாட்டின் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மேல் குறிப்பிட்டுள்ள சிவில் அமைப்புகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட தலையீட்டில் மேற்கொள்ளப்பட்ட சில கட்டுமானங்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நில மீட்புக் கூட்டுத்தாபனம் மூலம் செய்த சில பணிகள் தொடர்பான தகவல்கள் அடங்கும்.
மேலும் தற்போது திரப்பட்டு வரும் தகவல்களை வழக்கறிஞர்கள் குழுவொன்று ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |