கோட்டாபய-வின் ராஜினாமா கடிதம் போலியானது: இலங்கை ஜனாதிபதி அலுவலகம் தகவல்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்து தொடர்பாக இணையத்தில் வெளியாகி உள்ள கடிதம் போலியானது என அந்த நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றத்தை தொடர்ந்து, அவரது ராஜினாமா கடிதம் கிடைக்கப்பெற்றதாக இலங்கை சபாநாயகரின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் கடிதம் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கடிதம் வியாழன்கிழமை சபாநாயகருக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மின்னஞ்சல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற முழு விவரங்கள் இதுவரை தெளிவாக தெரியவில்லை.
இந்தநிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜினாமா செய்தது செய்தது தொடர்பான கடிதங்கள் போலியானது என தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: சுஷ்மிதா சென்னுடன் நிச்சியமாக திருமணம் நடைபெறும்: முன்னாள் ஐபிஎல் தலைவர் ட்விட்டரில் தகவல்!
இதுத் தொடர்பாக இலங்கையின் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், இணையத்தில் வெளியாகி பரவி வரும் கோட்டாபய ராஜபக்சவின் ராஜினாமா கடிதம் போலியானது என தெரிவித்துள்ளது.