ராஜினாமா கடிதத்தை சமர்பிக்காத கோட்டபய ராஜபக்ச: சிங்கப்பூர் செல்ல திட்டம்!
இலங்கை சபாநாயகர் அறிவித்தப்படி கோட்டாபய ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை 13ம் திகதி அனுப்பி வைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையே போராட்டக் களமாக மாறி முற்றிலும் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறி மாலைத் தீவில் தஞ்சம் அடைந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியில் இருந்து 13ம் திகதி பதவி விலகுவதாகவும் அதற்கான கடிதத்தையும் அன்றே சமர்பிப்பார் என்றும் அந்த நாட்டின் சபாநாயகர் அறிவித்தார்.
12.00 am : President Gotabaya Rajapaksa has not sent his resignation letter on 13th as Speaker announced. There are reports that he might send his resignation letter once he reaches Singapore from Maldives pic.twitter.com/sFT4wJ2sCd
— Azzam Ameen (@AzzamAmeen) July 13, 2022
ஆனால் சபாநாயகர் அறிவித்தப்படி கோட்டாபய ராஜபக்ச இதுவரை தனது ராஜினாமா கடிதத்தை சமர்பிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: நாடாளுமன்றத்தை பாதுகாக்க படைத் தளபதிகளுக்கு உத்தரவு: ரணில் விக்கிரமசிங்க அதிரடி!
மேலும் கோட்டாபய ராஜபக்ச மாலைத் தீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற பின்னர் அவரது ராஜினாமாவை சமர்பிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.