இலங்கை திரும்பினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச: வீடியோ காட்சி!
தாய்நாடு திரும்பினார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தாய்நாடான இலங்கைக்கு ஆதரவாளர்களின் வரவேற்புடன் திரும்பியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத அந்நிய செலாவணி நெருக்கடியை தொடர்ந்து, நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் ஆகியவை தாறுமாறாக அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் வெடித்த மக்கள் போராட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகம் ஆகியவை ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்டது.
Former President Gotabaya Rajapaksa welcomed by his supporters after returning to Sri Lanka after fleeing the country in early July pic.twitter.com/huK4Yet5yR
— NewsWire ?? (@NewsWireLK) September 3, 2022
இதையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலத்திவு வழியாக சிங்கப்பூருக்கும், அதன்பின் தாய்லாந்திற்கும் தப்பிச் சென்றார்.
இதனிடையில் சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் தாய்நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று மீண்டும் இலங்கைக்கு நாடு திரும்பியுள்ளார்.
Former President Gotabaya Rajapaksa welcomed by his supporters after returning to Sri Lanka after fleeing the country in early July pic.twitter.com/mj2m3Qvf6Z
— Azzam Ameen (@AzzamAmeen) September 3, 2022
பொருளாதார பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாத சூழ்நிலையில் மீண்டும் தாய்நாடான இலங்கைக்கு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்சவிற்கு அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் குவிந்து வரவேற்பு வழங்கியுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: சிறுவர்களின் உயிரை குடிக்கும் ஆன்லைன் TikTok சவால்கள்: 14 வயதி சிறுவன் பிளாக் அவுட் சவாலுக்கு உயிரிழப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்பும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.