கொழும்பில் வெடித்த வன்முறை! மெளனம் கலைத்த ஜனாதிபதி கோட்டாபய... வெளியிட்ட டுவிட்டர் பதிவு
கொழும்பில் கலவரம் வெடித்துள்ள நிலையில் அது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய மெளனம் கலைத்துள்ளார்.
இன்று காலை அரசாங்க ஆதரவாளர்கள் அரச எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர். இந்தநிலையில், போராட்டக்காரர்களின் பகுதிக்குச் சென்ற மகிந்த ஆதரவாளர்கள் அங்கிருந்தவர்களை தாக்கியதில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல் நடைபெறும் வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். வன்முறை தற்போதைய பிரச்சனைகளை தீர்க்காது.
Strongly condemn the violent acts taking place by those inciting & participating,irrespective of political allegiances. Violence won’t solve the current problems.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) May 9, 2022
I request all citizens to remain calm & exercise restraint. I urge everyone to work together in solving this crisis
அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நெருக்கடியை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.