இருநாடுகளுக்கு இடையிலான உறவு பலப்படும்.. புதிய ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராகியுள்ள ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான் காலமானதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தெரிவு செய்யப்பட்டார்.
இதன் மூலம் அந்நாட்டின் மூன்றாவது அதிபர் என்ற பெருமையை ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பெற்றார். அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதிதாக பதவி ஏற்ற ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations to the newly appointed President of #UAE, His Highness Sheikh Mohamed bin Zayed Al Nahyan. I am confident that the bilateral relationship between our two nations will be further strengthened to reach greater heights. pic.twitter.com/m3B99mKU2e
— Gotabaya Rajapaksa (@GotabayaR) May 17, 2022
அதில் அவர் கூறும்போது, 'ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள மேன்மை பொருந்திய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு வாழ்த்துக்கள். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட்டு, அதிக உயரங்களை எட்டும் என்று நான் நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.