விவேக் உடலுக்கு கை தாங்கலாக நடந்து வந்து அஞ்சலி செலுத்திய நடிகர் கவுண்டமணி! வெளியான வீடியோ
நடிகர் விவேக் மறைந்த நிலையில் அவர் உடலுக்கு நேரில் வந்து நடிகர் கவுண்டமணி அஞ்சலி செலுத்தினார்.
நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
இதையடுத்து அவர் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கவுண்டமணி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
வயது மூப்பு காரணமாக தள்ளாத நிலையிலும் பொறுமையாக கை தாங்கலாக வந்து விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
விவேக்கின் திரையுலக ஆரம்ப காலத்தில் கவுண்டமணியுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுண்டமணி சார் இரங்கல் தெரிவிக்க வந்த போது...!#RIPVivekSir 🙏😢 pic.twitter.com/r1e5kUMAAm
— ✞𝐋𝐈𝐕𝐄 ॐ 𝐋𝐄𝐓 𝐋𝐈𝐕𝐄 ✯MSD💛 (@Biker_PraveenAK) April 17, 2021