நடிகை கௌரி கிஷன் உருவ கேலி விவகாரம்.., மன்னிப்பு கேட்ட யூடியூபர்
நடிகை கௌரி கிஷன் உருவ கேலி சர்ச்சையை தொடர்ந்து சம்பந்தப்பட்ட யூடியூபர் தற்போது மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
உருவக்கேலி சர்ச்சை
சமீபத்தில், நடிகை கௌரி கிஷன் நடித்துள்ள அதர்ஸ் என்ற திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, பத்திரிகையாளர் கார்த்திக் என்பவர் படத்தின் இயக்குநரிடம், நடிகையின் உயரம் மற்றும் எடை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

உடனடியாக நடிகை கௌரி கிஷன், எனது எடைக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம்? இதேபோன்ற கேள்விகளை நீங்கள் நடிகர்களிடம் கேட்பீர்களா? என்று பதிலடி கொடுத்தார்.
மேலும், இந்த கேள்விக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நடிகை கௌரி கிஷன் வலியுறுத்திய நிலையில் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
மன்னிப்பு கேட்ட யூடியூபர்
இந்நிலையில், அவரின் இந்த கேள்விக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த யூடியூபர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், கௌரி கிஷன் நிகழ்வால் கடந்த மூன்று நாட்களாக மன உளைச்சலுடன் இருக்கிறேன், உருவ கேலி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் கேட்கவில்லை, அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று கூறியுள்ளார்.
கௌரி கிஷன் விவகாரம்! மன்னிப்பு கேட்ட youtuber!@Gourayy pic.twitter.com/F5hof3Akry
— RAJA DK (@rajaduraikannan) November 8, 2025
மேலும், இந்த கேள்வியால் அவரது மனம் பாதிக்கப்பட்டு இருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |