அரசு பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளுக்கு காலாண்டு விடுமுறையானது நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகின்றது.
காலாண்டு விடுமுறை நீடிப்பு
கடந்த நாட்களில் பருவ தேர்வுகள் முடிவடைந்த நிலையில் 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 3 ஆம் திகதி வரையும் 6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 ஆம் திகதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதிகளின் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது 1- 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9 ஆம் திகதியும் 6 -12 ஆம் மாணவர்களுக்கு முன்னர் அறிவித்த திகதியிலேயே ஆரம்பிக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
1-5 ஆம் வகுப்புகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் 2 கட்டங்களாக எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறவிருகின்றது. அதில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி செயலகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |