பிரித்தானியா ஆபத்தான நிலையில் உள்ளது... நிபுணர்களின் பேச்சை அரசு கேட்கவில்லை! போட்டுடைத்த மருத்துவர்
பிரித்தானியா அரசாங்கம் கொரோனா நடவடிக்கைகள் குறித்து முடிவை அறிவியலை மையமாக வைத்து எடுக்கவில்லை என்று EveryDoctor-ன் தலைமை நிர்வாகி டாக்டர் ஜூலியா பேட்டர்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்றும் கட்டுப்பாடுகள் குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் நிலவும் நிலைமை குறித்து EveryDoctor-ன் தலைமை நிர்வாகி டாக்டர் ஜூலியா பேட்டர்சன் கூறியதாவது, பிரித்தானியா இப்போது ஒமிக்ரானால் ஆபத்தான நிலைியல் உள்ளது.
ஆனால், முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டாம் என முடிவு செய்துள்ளனர்.
பிரித்தானியா அரசு நிபுணர்களின் பேச்சைக் கேட்க விரும்பவில்லை, அது மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. நாம் இதற்கு முன் பல முறை இதைப் பார்த்திருக்கிறோம்.
NHS தற்போது பெரிய அழுத்தத்தில் உள்ளது என NHS ஊழியர்கள் அவரது அமைப்பிடம் வேதனை தெரிவித்திருப்பதாக டாக்டர் ஜூலியா பேட்டர்சன் கூறினார்.