திடீரென அமைச்சரின் காலில் குழந்தையை வைத்த அரசு ஓட்டுநர்! காரணம் இது தான்
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் காலில் குழந்தையை வைத்த அரசு ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் காலில் குழந்தையை வைத்த அரசு ஓட்டுநர்
கோயம்புத்தூர் சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட அறையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு சான்றிதழ் வழங்கினார். அப்போது மேடைக்கு வந்த அரசு ஓட்டுநர் கண்ணன் என்பவர், தனது 6 மாத குழந்தையை அமைச்சரின் காலில் வைத்தார்.
உடனடியாக குழந்தையை அமைச்சர், மேயர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கையில் எடுத்தனர்.
காரணம் என்ன?
அமைச்சரின் காலில் குழந்தையை வைத்த கண்ணன், பணி மாறுதல் தொடர்பாக அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
அதாவது இது குறித்து கண்ணன் கூறும்போது,"தனக்கு 6 மாத குழந்தையும், 6 வயது குழந்தையும் இருக்கிறது. என்னுடைய மனைவி சில மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் இறந்து விட்டார். தேனி மாவட்டமான எனக்கு தாயின் அரவணைப்பு இல்லாமல் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியவில்லை.
மேலும், எனது பெற்றோர்கள் வயது முதிர்வின் காரணமாக அவர்களை கோவைக்கு அழைத்து வர இயலவில்லை.
அதனால், எனது சொந்த ஊருக்கு பணி மாறுதல் செய்யும்படி பொது மேலாளரிடம் பலமுறை கோரிக்கை வைத்தேன். ஆனால், அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. இந்த காரணத்தினால் தான் குழந்தையை அமைச்சரின் காலில் வைத்து கோரிக்கை வைத்தேன்" என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |