அரசு ஊழியர் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யலாமா? விதிகள் என்ன?
மத்திய சிவில் சர்வீசஸ் விதிகள், 1964-ன் 35(1) இன் படி, ஒரு அரசு ஊழியர் பங்குச் சந்தை வர்த்தகம் அல்லது வேறு எந்த வணிகத்திலும் ஈடுபடக்கூடாது.
ஆனால் அரசு ஊழியர்கள் பங்குத் தரகர்கள், பதிவு செய்யப்பட்ட ஏஜென்சிகள், உரிமம் அல்லது சான்றிதழ் வைத்திருப்பவர்கள்/ஏஜென்சிகள் மூலம் அவ்வப்போது பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். அதாவது அரசு ஊழியர்கள் பங்குச் சந்தையில் மட்டுமே முதலீடு செய்ய முடியும், வர்த்தகம் செய்ய முடியாது.
சமீபத்திய சுற்றறிக்கையின்படி, எந்த ஒரு அரசு ஊழியரும் தனது அடிப்படை சம்பளத்தை 6 மடங்குக்கு மேல் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அது குறித்து அவருடைய துறையிடம் தெரிவிக்க வேண்டும்.
விதி 35(1) பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம். நீங்கள் ஒரு அரசு ஊழியராக இருந்தால், உங்களால் மீண்டும் மீண்டும் பங்குகள் அல்லது பத்திரங்கள் (அல்லது வேறு முதலீடு) வாங்க முடியாது. அதையும் விற்க முடியாது. ஏனெனில் இது ஒரு ஊக வணிகமாகக் கருதப்படுகிறது.
அரசு ஊழியர் எங்கு முதலீடு செய்யக்கூடாது?
மத்திய சிவில் சேவைகள் (நடத்தை) விதிகளின் விதி எண், 1964. பிரிவு 40(2)ன் பகுதி (i)ன் படி., அரசாங்க ஊழியர்கள் தங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் அல்லது பணியில் இருந்து நீக்கம் செய்யக்கூடிய எந்த முதலீட்டையும் செய்யக்கூடாது என்பதை அங்கீகரிக்க வேண்டும். ஒரு பணியாளரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர் சார்பாக பணிபுரியும் பிற நபர்களுக்கு இதே விதிகள் பொருந்தும் என்று விதிகள் கூறுகின்றன.
பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான விதிகள் என்ன?
2019-ஆம் ஆண்டில், அரசு ஊழியர்களின் பங்கு முதலீடுகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் அறிவிப்பின் வரம்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (HRD Ministry) அறிவித்துள்ள உத்தரவின்படி, திருத்தப்பட்ட வரம்பு இப்போது ஊழியரின் ஆறு மாத அடிப்படை ஊதியத்திற்கு சமம். அரசு உத்தரவின்படி எளிமையான வகையில், ஒரு நிதியாண்டில் ஒரு ஊழியரின் முதலீடு அவரது 6 மாத அடிப்படை சம்பளத்தை விட அதிகமாக இருந்தால், அவர் அத்தகைய பங்குகள், பத்திரங்கள், கடன் பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்பட்ட மொத்த முதலீடு பற்றிய முழு விவரங்களையும் அளிக்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கான முதலீட்டு விருப்பங்கள் என்ன?
அரசு ஊழியர்கள் தனிப்பட்ட நிதி இலக்குகளின் அடிப்படையில் பின்வரும் சில முதலீட்டு விருப்பங்களில் முதலீடு செய்யலாம்.
1. மியூச்சுவல் ஃபண்ட்ஸ் (Mutual Funds)
2. பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund)
3. தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme)
4. பங்குகளில் நீண்ட கால முதலீடு (Long term investment in shares)
5. வங்கி வைப்பு (Bank deposits)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Can government employee trade in stock market, rules for investing in stock market, Business news in tamil, stock market news, Investment Plans, Investment Ideas