பிரான்சில் மீண்டும் ஊரடங்கா? பிரதமர் முக்கிய தகவல்
பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து பிரதமர் Jean Castex தெளிவுப்படுத்தியுள்ளார்.
பிரான்சில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸ் அரசு தடுப்பூசி பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
சமீபத்திய அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, கடந்த வாரத்தில் தினசரி சராசரியாக 44,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளது, இது முந்தைய வாரத்தை விட 36% அதிகமாகும்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வாராந்திர எண்ணிக்கையும் 1,120 அதிகரித்து, இது முந்தைய வாரத்தை விட 41% அதிகரித்துள்ளது.
திங்களன்று, அரசாங்கம் ஜனவரி 6 வரை இரவு கிளப்புகளை மூடியது மற்றும் உட்புற இடங்களிலும் வெளிப்புறங்களிலும் சமூக விலகல் நடவடிக்கைகளை கடுமையாக்கியது.
இந்நிலையில், நோய் தொற்று அதிகரித்து, அதிகமான மக்கள் மருத்துவ உதவியை நாடுவதால், கிறிஸ்துமஸுக்கு முன் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த பிரான்ஸ் அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர்.
மக்கள் வழக்கம் போல கிறிஸ்மஸ் கொண்டாடலாம், ஆனால் நாம் விதிகளை மதிக்க வேண்டும். மற்றும் தடுப்பூசி போட வேண்டும் என்று பிரான்ஸ் பிரதமர் Jean Castex கூறினார்.
பொது நிகழ்வுகள் மற்றும் சமூகக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் அல்லது தடைசெய்யும் மற்றொரு ஊரடங்கை அமுல்படுத்துவதில் தொடர்பில் அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்று Castex தெளிவுப்படுத்தியுள்ளார்.