பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
பாரதியார் பல்கலைக்கழகத்தில் Full Time Project Assistant பதவி வெற்றிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழக பணிக்கு M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கல்வி தகைமை
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து M.Sc. E-Learning Technology / M.A. Educational Communication / M.Sc. Electronic Media (Education) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.10,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவம் ( Resume) , சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல், வெளியீடுகள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களுடன் எதிர்வரும் 05.10.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.