PCR சோதனை கட்டணம் தொடர்பில் சுவிஸ் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு
சுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நபர்களுக்கான PCR சோதனைகளின் செலவுகளை பெடரல் அரசு இனி ஈடுசெய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை பெடரல் கவுன்சில் புதன்கிழமை அறிவித்துள்ள நிலையில், வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவர் தனிமைப்படுத்தப்பட மாட்டார் என்பதாலையே புதிய விதியை பெடரல் நிர்வாகம் அமுலுக்கு கொண்டுவந்துள்ளது.
இருப்பினும், முதியோர் அல்லது முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் அல்லது தொழில்முறை அல்லது சுகாதார காரணங்களுக்காக தொடர்ந்து மருத்துவமனையில் தங்கியிருப்பவர்களுக்கு PCR சோதனைக் கட்டணம் இலவசமாக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, கீமோதெரபிக்கு உட்பட்டவர்கள் போன்ற குறிப்பாக இக்கட்டான சூழலில் உள்ளவர்களுக்கும் PCR சோதனைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.