கனடா அரசின் தடுப்பூசி திட்டம் ‘தோல்வி’! பிரதமர் ட்ரூடோவுக்கு குவியும் எதிர்ப்பு: அம்பலப்படுத்திய கருத்து கணிப்பு
ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்தின் கொரோனா தடுப்பூசி திட்டம் ‘தோல்வியானது’ என கிட்டதட்ட 60% கனேடியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதாக Angus Reid Institute கருத்து கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.
கனடாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரதமர் ட்ரூடோ மற்றும் எம்.பி.க்கள் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
Angus Reid Institute கருத்து கணிப்பில், 41% பேர் தடுப்பூசி விஷயத்தில் கனடாவால் இதற்கு மேல் பெரிதாக செய்திருக்க முடியாது என ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் அதிகபட்சமாக 59% பேர் கனடா அரசு திட்டமிடுதலில் தோல்வியடைந்துவிட்டதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி போட விரும்பும் கனேயர்களுக்கு அதற்கான வாய்ப்பளிக்கப்படும் என பிரதமர் ட்ரூடோ தொடர்ந்து உறுதியளித்து வரும் நிலையில், வெறும் 37% பேர் மட்டுமே அவரின் உறுதியளிப்பு மீது நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதே போல் தடுப்பூசி விநியோகத்தை திறம்பட நிர்வகிக்கும் கனடா அரசின் திறன் மீது 43% கனேடியர்கள் மட்டுமே நம்பிக்கை தெரிவித்துள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் காட்டுகிறது.