ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்த தடை: அலர்ட் செய்த ரஷ்யா
ரஷ்யாவில் அரசுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்த தடை
இன்று முதல் ரஷியாவின் தொலை தொடர்பு மற்றும் அரசு துறையை சேர்ந்த அனைத்து நிறுவன பணியாளர்களும் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தக்கூடாது என்று ரஷ்ய வர்த்தக துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே சில அரசு அதிகாரிகள் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது அனைத்து அரசு அதிகாரிகளும் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
ஆப்பிள் போன்களில் அரசு அதிகாரிகள் பணி சார்ந்த சில தகவல் பரிமாறக்கூடாது என்றும், உங்களுடைய சொந்த தேவைக்காக மட்டும் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது. அதில், ஆப்பிள் நிறுவன சாதனங்கள் மூலமாக அமெரிக்க உளவு நிறுவனங்கள் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தது.
மேலும் நேட்டோ நாடுகளில் வசித்து வரும் ரஷ்ய அதிகாரிகளின் ஐபோன்களில் உளவு மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியது. ஆனால், ஆப்பிள் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுக்களை முற்றிலும் மறுப்பு தெரிவித்தது.
மேலும், தனியுரிமை பாதுகாப்பில் கவனமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ரஷ்யா அரசு ஊழியர்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |